கொரனா வைரஸ்சா? சீனா தயாரித்த புதிய பயோ ஆயுதமா என்ற கேள்வி எழுந்துள்ளது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சமீப காலமாக உலகை அச்சுறுத்தி வருகிறது கொரனா வைரஸ். சீனாவில் பரவிய கொரோனா வைரசுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

Is Coronavirus a bio weapon

சீனாவில் மட்டும் 7 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர், இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கிட்டதட்ட 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு கொரனோ வைரஸ் பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கொரனா வைரஸ் குறித்த அச்சம் உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது.

Is Coronavirus a bio weapon

இந்நிலையில், கொரனா வைரஸ் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, உலக நாடுகளுக்கு எதிராகவும், அடுத்து மூளப்போகும் 3 ஆம் உலகப் போரில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் சீனா மறைமுகமாக பயோ ஆய்வுக் கூடங்களை நடத்தி, அதன் மூலம் மனித உயிர்களைக் கொல்லும் வைரஸ்களை புதிதாக உருவாக்கி வந்ததாகவும், தற்போது அந்த வைரஸ் வெளியாகித் தான், இந்த உயிரிழப்புகள் நடப்பதாகவும் சந்தேகப்படுவதாகக் கூறியுள்ளார். இந்த தகவலை எல்லாம், ஒரு குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில், தான் படித்ததாகவும் அவர் கூறியுள்ளது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதனால், கொரனா என்பது வைரஸ்சா? அல்லது சீனா தயாரித்த புதிய ஆயுதமா?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.