ஆன்லைன் ஆபாசத்தைக் கட்டுப்படுத்த புது முயற்சியாகஃபேஸ் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு முன்மொழிந்துள்ளது.

இணையதளம் மூலம் ஆபாசப்படம் மிகப் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் சில புதிய கட்டுப்பாடுகள் புதிது புதிதாக விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் பல ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் வயது வித்தியாசம் இல்லாமல் இணையதளம் மூலம் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஆன்லைன் ஆபாசத்தைக் கட்டுப்படுத்தும் புது முயற்சியாக, புதிய யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் ஆபாசத்தைப் பார்ப்பதற்காக ஃபேஸ் ஸ்கேன் செய்வதற்கான புதிய யோசனையை முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபாச வீடியோ பார்ப்பவர்கள் பற்றிய வயது உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆன்லைனில் ஆபாசத்தைப் பார்க்க விரும்பும் நபர்கள், சட்டப்பூர்வமா வயதுடையவர்கள் என்பதைச் சரிபார்க்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம், சிறார்கள் ஆபாசத்தைப் பார்ப்பதைத் தடை செய்யவில்லை என்பதால், இந்த புதிய யோசனையானது முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறார்களை நல்வழிப்படுத்த முடியும் என்றும், சிறார் தொடர்பான குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதால், இந்த யோனையை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பொதுமக்களிடம் விரைவில் கருத்துக் கேட்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.