தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

10 Districts Leave today

தீபாவளி பண்டிகை அன்று கூட தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனையடுத்து, தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்ததால், சில மாவட்டங்களில் மட்டும் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Districts Leave today

அதன்படி தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரியில் சில பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, சில மாவட்டங்களில் முன்கூட்டியே மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்ட பிறகு, இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியானதால், பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 Districts Leave today

மேலும், சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.