தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் முதல், இரு சுழற்சி முறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதாவது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 முறை சுழற்சியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, காலை நேர கல்லூரியானது காலை 7.30 மணிக்குத் தொடங்குவதால், பல கிராமப்புற மாணவர்கள் காலையில் உணவருந்த முடியவில்லை என்றும், இதன் காரணமாக ரத்த சோகை போன்ற நோயால் இளம் சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைக் கருத்தில்கொண்ட கல்லூரி கல்வி இயக்ககம், கடந்த 2006 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த கல்லூரி நேர பயிற்சி முறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.