டெல்லியிலிருந்து தமிழகம் வரும் ரயில்கள் 14 மற்றும் 16 ஆம் தேதி மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்டன. இதனால், பணி நிமிர்த்தமாக வெளியூர் சென்றவர்கள், அங்கேயே இருக்க வேண்டி சூழல் ஏற்பட்டது.

 Trains coming to Tamil Nadu will run only on 14th and 16th

இதனிடையே, இந்தியா முழுவதும் 3 வது மறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டபோது, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள முக்கிய 15 நகரங்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்குவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், ரயில், விமான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை மே 31 ஆம் தேதி வரை, தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் வலியுறுத்தினார்.

மேலும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனைப் பரிசீலனை செய்த ரயில்வே அமைச்சகம், தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 Trains coming to Tamil Nadu will run only on 14th and 16th

குறிப்பாக, கொரோனா பரவலைக் கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலியைப் பயணிகள் அனைவரும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. 

இதனிடையே, வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.