பெண்ணுறுப்பில் மதுவை ஊற்றி, இளம் பெண்ணை விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சைக்கோ விமானியை போலீசார் தேடி வருகின்றனர்.

பாரதி கண்ட புதுமை பெண்கள் எல்லாம், புரட்சி பெண்ணாக இப்போது தான், வீரம் கொண்டு வெகுண்டு எழுகிறார்கள். கிராம புரங்களில், அடுப்படியைத் தாண்டி, இப்போது தான் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கிறார்கள்.

ஆனால், பெண்களின் சிறகை உடைத்து, அவர்களைப் போதை வாஸ்துகளா மட்டுமே பார்க்கும் வழக்கம், நம் ஆண்கள் இனத்தில் இன்னும் மாறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில், ஏவியேஷன் டிப்ளமோ படிப்பை, அங்குள்ள விடுதியில் தங்கி இளம் பெண் ஒருவர் படித்து வந்தார்.

அப்போது, அவருடன் கூடவே படித்த 23 வயதான கௌதம், அவருடன் அறிமுகமாகிக் காதலித்துள்ளார். இருவரும் நெருங்கி காதலித்து வந்தனர்.

இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 29 ஆம் தேதி இரவு, அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து ஒன்றாகத் தங்கி உள்ளனர்.

அப்போது, கௌதம் அந்த இளம் பெண்ணுக்குக் குடிக்க மது கொடுத்துள்ளார். அந்த பெண்ணும், அதை வாங்கி குடித்து உள்ளார். பின்னர், இளம் பெண் போதையில் மயங்கிவிடவே, அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் மதுவை ஊற்றி, சைக்கோ தனமாகக் கொடூரமான முறையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும், இரவு முழுவதும் அந்த பெண்ணை தனது காம இச்சைக்கு இறையாக்கி, விடிய விடிய அந்த இளம் பெண்ணை கசக்கிப் பிழிந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில், அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பு கடுமையாகச் சேதமாகி உள்ளது.

இதனையடுத்து, அங்கிருந்து அவன் தப்பிச் சென்றுள்ளான். பின்னர், தனியார் விடுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த இளம் பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த தனியார் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, கௌதமை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, காதலியின் பிறப்பு உறுப்பில், மதுவை ஊற்றி, காதலனே சைக்கோ தனமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண், ஆணுக்கு இணையானவள்! என்ற சமமற்ற தன்மையே, பெண்களைப் போதைப் பொருளாகப் பார்க்கத் தோன்றுகிறது.

பெண்களைப் பெருமைப் படுத்தவிட்டாலும் பரவாயில்லை, அவர்களைச் சிறுமைப்படுத்தாமல் இருந்தாலே போதும், பெண்மை வாழும். ஆண்மை மேலோங்கும். சமூகம் சிறக்கும். மனிதம் பிறக்கும்!