கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட உலகின் மோசமான 7 வது நாடாக இந்தியா மாறியுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னும் பெருந்தொற்று. இதில், உலக அளவில் உலக வல்லரசான அமெரிக்காவின் மிகவும் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வைரசின் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் தீவிரமாகப் பரவத் தொடங்கி உள்ளது.



கொரோனா வைரஸ் பரவலில், நேற்று ஒரே நாளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, இந்தியா 7 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவிலேயே, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, இதுவரை 2,286 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 29,329 பேர், கொரோனா வைரசிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 22,333 பேரும், டெல்லியில் 19,844 பேரும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், டெல்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டது.

புதுச்சேரியில் முதல் முறையாக மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு, கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1,90,962 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியளாவில் கொரோனாவால் இதுவரை 5,411 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இந்தியாவால் கொரோனா பாதிப்பிலிருந்த குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 91,866 பேராக உயர்ந்துள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.