சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பெங்களூரு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்து பிரதமர் மோடி, உரையாற்றினார். 

India self sufficient in health sector - PM Modi

அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரி” என்று குறிப்பிட்டார். 

“முன்கள பணியாளர்களின் சேவை அளப்பரியது என்றும், இந்திய மருத்துவ பணியாளர்களை உலகம் நன்றி உணர்வோடு நோக்கி வருகிறது” என்றும் கூறினார்.

“கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே முன்னணி போர் வீரர்கள் என்று புகழாராம் சூட்டிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள நமது மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், “மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார்.

India self sufficient in health sector - PM Modi

அதேபோல், “தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றும், ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம்” என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம், சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுகிறது” என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். 

இதனிடையே, “மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை குழு தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.