வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பாலியல் குற்றம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யத்தை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத்தொடரப்பட்டது. இந்திய கற்பழிப்பு சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் ஒரு பெண், ஒரு ஆண் சார்பில் வழக்குத்தொடரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வலுக்காட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யம் நமது வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பாலியல் வன்முறை. திருமணம் என்ற கட்டமைப்பில் எத்தனை முறை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. அவற்றில் எத்தனை பதிவு செய்யப்படுகிறது. இந்த தகவல்கள் ஒருபோதும் பதியப்படுவதில்லை மேலும் ஆராயப்படுவதுமில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம். திருமணமான பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வித்தியாசமாக கருத்தப்படுகின்றனர் என தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கிலும் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.