“என்னுடன் பாலியல் உறவு கொள்ள விருப்பமா? என்று, நான் நேரடியாகவே கேட்பேன்” என்று, பிரபல மலையாள நடிகர் விநாயகன் பொது மேடையில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடித்த “திமிரு” படத்தில், முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஆனார். அதன் தொடர்ச்சியாக, தனுஷ் உடன் “மரியான்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து, தமிழ் ரசிர்களிடம் இன்னும் பிரபலமானார்.

அதே நேரத்தில், தமிழ் சினிமாவை காட்டிலும், நடிகர் விநாயகன், மலையாள சினிமாவில் எப்போதும் பிரபலமான நடிகராகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான், சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் “ஒருத்தி” பட விளம்பரம் குறித்து, கேரள மாநிலம் கொச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் முன்பு பேசிய அவர், சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தன்னையும் மறந்து “உண்மையை பேசுகிறேன்” என்ற பெயரில், அவர் சர்ச்சைக்குறிய வகையில் பேசி, பெரும் சிக்கிலில் மாட்டிக்கொண்டு உள்ளார்.

அதாவது, செய்தியாளர்கள் “மீ டூ” விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விநாயகன், “கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அது எனக்கு என்னவென்று புரியவில்லை” என்று, குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ந்து பேசிய நடிகர் விநாயகன், “ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்வது தான் மீ டூ வா? என்றும் தெரியவில்லை” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “ஒரு பெண்ணை பார்க்கும் போது, அந்தப் பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்தப் பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள விருப்பமா? என்று கேட்பேன்” என்றும், மிகவும் சர்ச்சையான வகையில் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “சம்மந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து விட்டால், அவருடன் உறவு வைத்துக் கொள்வேன் என்றும், இப்படி நான் பலரிடம் பாலியல் உறவு வைத்துள்ளேன்” என்றும், சர்ச்சைக்குறிய வகையில், மிகவும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

நடிகர் விநாயகனின் இந்த பேச்சுக்கு, கேரளாவில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, கேரளாவில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புகளும், பல்வேறு இயக்கத்தினரும் மிக கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து உள்ளனர். பலரும், இது தொடர்பாக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், மலையாள சினிமா உலகில் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசும் பொருளமாக மாறி உள்ளது.

இதனிடையே, “கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்கு நடிகர் விநாயகனை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது மீண்டும் அவர் பாலியல் ரீதியான சர்ச்சையில் சிக்கி உள்ளார்.