திருமண விழாவிற்கு, தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் வந்த நபரால், பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகின் ஒட்டு மொத்த இளைஞர்களும் வயிற்றெரிச்சல் படும் அளவுக்கு, நைஜீரிய நாட்டில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, நைஜீரிய நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரான வில்லியம்ஸ்க்கும் - பிரபல நடிகையான ஆஸ்கார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும், விதம் விதமான ஆடை அணிந்துகொண்டு, பலரது கவனத்தையும் ஈர்த்தனர்.

அதன் படி, அந்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர் போன pretty மைக், தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் கலந்து கொண்டு, அந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவரின் கவனத்தையும் தனியாக பெற்றார்.

நைஜீரிய நாட்டின் சமூகவலைத்தள பிரபலமான, pretty மைக், அங்குள்ள லாக்கோஸ் நகரில் வசித்து வருகிறார். அத்துடன், அந்நாட்டில் இவர் நைட் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இவர், தனது 5 மனைவிகளுடன் திருமண ஆடையில் போஸ் கொடுத்தார். இந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இருந்தார். இதனால், அப்போதே அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். 

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான வில்லியம்ஸ்க்கும் - பிரபல நடிகையான ஆஸ்காரின் திருமணம் விழாவில், தனது 6 மனைவிகளுடன் அவர் கலந்துகொண்டார். இதில் என்ன விசேசம் என்றால், pretty மைக்கின் 6 மனைவிகளும் தற்போது ஒரே சமயத்தில் கரு உற்று இருக்கிறார். இப்படி, கரு உற்ற தனது 6 மனைவிகளுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு சிலர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். ஆனால், பலரும் இந்த புகைப்படத்தை தங்களது பக்கத்தில் பகிர்ந்து தங்களது வயிற்றெரிச்சலைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இணையவாசிகள் பலரும் 6 மனைவிகளைத் திருமணம் செய்ததற்கு கடுமையாகன கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, இவரது புகைப்படத்திற்கு 90ஸ் கிட்ஸ்கள் சிலர், “எங்கள் பாவம் உங்களை சும்மா விடாது டா” என்று, நக்கலாகவும், கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனால், pretty மைக் பகிர்ந்து உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

pretty மைக் எப்போதும் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இதனால், அவரை பலரும் “சர்ச்சை பிரபலம்” என்றே அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். அதன் படியே, அவர் தற்போதும் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.