2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

கே.ஜி.எப் படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்த படம் ஜூலை 21ஆம் தேதி 2021-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் ஆனால் தற்போதுள்ள சூழலில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

கொரோனா பாதிப்பால் தடைப்பட்டிருந்த இந்த படத்தின் டப்பிங் வேலைகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.தற்போது இந்த படம் முதல் பாகத்தை விட பலமடங்கு செம மாஸாக இருக்கும் என்று இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு தெரிவித்துள்ளனர்,படத்தின் வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றும் படத்தினை ரசிகர்களுடன் பார்க்க பெரிதும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.