சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சன் மியூஸிக்கில் மாமிஸ் டே அவுட் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா.தனது கடின உழைப்பால் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் ப்ரியங்கா.

சூப்பர் சிங்கர்,கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக்,கிங்ஸ் ஆப் காமெடி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் கலக்கப்போவது யாரு தொடரில் நடுவராகவும் பங்கேற்று அசத்தியிருந்தார் ப்ரியங்கா.அடுத்ததாக தற்போது ஒளிபரப்பாகி வாயூரம் சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தனியாக தொகுத்து வழங்கி பெரிய வெற்றி அடைந்த நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக்.இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து இருந்தது.தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.எப்போதும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா இந்த முறை தொகுத்து வழங்கவில்லை ஆதலால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.இவர் உண்மையிலேயே பிக்பாஸில் கலந்துகொள்கிறாரா இல்லை வேறு காரணமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

View this post on Instagram

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)