தமிழகத்தில் “அக்டோபரில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க முடிவு” செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சற்று முன்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். 

அதாவத, “தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளையும் திறப்பது குறித்து, கடந்த 14 ஆம் தேதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலமாக கடந்த 14 ஆம் தேதி ஆலோசனை நடத்திய அவர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டு தெரிந்துகொண்டார். 

அப்போது, “சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம்” என்று வலியுறுத்தினர். 

மற்றும் சில கல்வி அதிகாரிகள் “1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளை திறக்கலாம்” என்றும் தெரிவித்து உள்னர்.

அதன் படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இன்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையில், “6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம்” என்றுதி, அதில்  பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

முக்கியமாக, “வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம்” என்றும், அந்த அறிக்கையில்  கூறப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“அந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெற இருக்கும் ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் உயர் அதிகாரிகளுடன் பரிசீலிப்பார்” என்றும், கூறப்படுகிறது.

தற்போது, முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ள அறிக்கையானது, பரீசீலிக்கப்பட்டு சுகாதாரத்துறையினரின் கருத்துக்களை பெற்று அதன் பிறகே முதலமைச்சர் சரியான நேரத்தில் தேவையான அறிவிக்களை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, “6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெறலாம்” என்று, அமைச்சர் பொன்முடி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.