ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் பூஜா. நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் அசத்தினார் பூஜா ராமச்சந்திரன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் ஜான் குக்கேன் என்பவரை திருமணம் செய்தார். 

PoojaRamachandran

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாடல் ஒன்றுக்கு நடனமாட, அதனை அவர் கணவர் வீடியோ எடுக்கிறார். பின்னர் அதே பாடலுக்கு பூஜாவின் கணவர் ஜான் நடனமாட அதனை பூஜா வீடியோ எடுக்கிறார். இதில் என்ன வேறுபாடு என்றால் இருவரும் உடையை மாறி மாறி அணிந்து கொள்கின்றனர். அதாவது ஜான் நடனமாடும் போது பூஜாவின் உடை அணிந்திருக்கிறார். ஜானின் உடையை பூஜா அணிந்திருக்கிறார். இது தான் ஃபிளிப் சேலஞ். 

Pooja Ramachandran

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.