அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். 

FIR

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது, விஷ்ணு விஷாலே இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி அசத்தியது. 

FIR Editing

கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் எஃப்.ஐ.ஆர் படக்குழுவினர் வீட்டிலிருந்தே படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் மனு ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.