தளபதி விஜயின் லியோ படத்திற்காக வாழ்த்துகள் தெரிவித்த விஷால்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திற்கு வாழ்த்தி விஷால் வெளியிட்ட வீடியோ,vishal shared a video of wishing thalapathy vijay and crew of leo movie | Galatta

லியோ, லியோ, லியோ என காத்திருந்த ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக வெளிவந்தது தளபதி விஜய்யின் லியோ திரைப்படம். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் ஆக்சன் ட்ரீட்டாக மட்டுமல்லாமல் பக்கா VISHUAL ட்ரீட்டாகவும் டபுள் விருந்து கொடுத்திருக்கிறது. ஆக்சன் திரைப்படங்களின் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை மிகச் சிறந்த முறையில் தனது காட்சி அமைப்புகளின் வாயிலாகவும் நேர்த்தியான திரைக்கதையின் வாயிலாகவும் வழங்கி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமா ரசிகர்களுக்கு மற்றொரு புதிய அனுபவமாக லியோ படத்தை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து கிளம்பிய எதிர்பார்ப்புகள் உச்சகட்டத்தை தொட்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மிகப் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக லியோ திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷால் அவர்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த சமயத்தில் நடிகர் விஷால் மற்ற படங்களில் கமிட் ஆகி இருந்ததால் தேதிகள் இல்லாத காரணத்தினால் லியோ திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனிடையே நேற்று அக்டோபர் 18ஆம் தேதி மாலை தற்போது தனது ஃபேவரட் ஹீரோவான தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகர் விஷால் வெளியிட்டு இருக்கும் வீடியோவில்,

“எல்லோருக்கும் வணக்கம்… எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்… எனக்கு பிடித்த ஏன் நம் எல்லோருக்கும் பிடித்த இளைய தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப் படம் கண்டிப்பாக ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என நம்புகிறேன். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக நீங்கள் திரையரங்குக்கு சென்று இந்த படத்தை பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்னுடைய ஃபேவரட் நடிகர் இளைய தளபதி விஜய், திரிஷா மற்றும் மொத்த நடிகர்கள் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். லியோ திரைப்படம் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நிச்சயமாக கடவுளிடமும் வேண்டிக் கொள்கிறேன். இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக இருக்கும். நீங்கள் எல்லோரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்த்து ரசித்து சந்தோஷப்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் எனக்கு பிடித்த நடிகர் இளைய தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தை பார்க்கப் போகிறேன். ஒட்டுமொத்த அணியினருக்கும் ALL THE BEST.”

என தெரிவித்திருக்கிறார். தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகர் விஷால் அவர்கள் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Wishing Ilayathalapathi Vijay and the entire cast and crew of #LEO a grand success, awaiting from tomorrow in theatres worldwide. Looking forward to watching it in theatres. Don’t miss it. God Bless. pic.twitter.com/WeU3KYRdH0

— Vishal (@VishalKOfficial) October 18, 2023