தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  இருக்கும் நடிகர் விஷால் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படமான சக்ரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  சக்ரா திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் அரிமா நம்பி, இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய திரைப்படமான எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார் நடிகர் விஷால்.

இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 நாட் எ காமன் மேன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிகர் பிரபுதேவா நடித்த தேவி 2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிம்பிள் ஹயாட்டி விஷால் 31 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஊரடங்குக்குப்பின் விஷால் 31 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வந்த விஷால் 31 இறுதிகட்ட படப்பிடிப்பில் போது அதிரடி க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒரு ஸ்டன்ட் காட்சியில் விஷால் நடிக்கும் போது முதுகில் பலத்த அடிபட்டுள்ளது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ரிஸ்க்கான சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அந்த படப்பிடிப்பு வீடியோவை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.