நடிகர் ஆர்யா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஜூலை 22ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசானது.1970-80களில் பிரபலமான குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் உடன் இணைந்துள்ளார் நடிகர் ஆர்யா.இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ளனர். மேலும் இளம் நடிகை மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எனிமி திரைப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார் தயாரித்துள்ளார். ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் எனிமி திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளரான R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் S.தமண் இசையமைக்கிறார். 

முன்னதாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எனிமி படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையில் உருவாகியிருக்கும் இந்த தீம் மியூசிக் முன்னணி ஆன்லைன் இசை தளங்களில் வெளியாகியுள்ளது.