குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ஹர்ஷலா ஹனி.குழைந்தை நட்சித்திரமாக நடித்து பின்னர் குறும்படங்கள் போன்றவற்றில் நடித்து அடுத்ததாக கன்னட சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ஹர்ஷலா ஹனி.

சிறுவயதிலேயே நடிக்கத்தொடங்கிய இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார் அவற்றுடன் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் ஹர்ஷலா.

தமிழில் ஓவியா என்ற தொடரில் நடித்து என்ட்ரி கொடுத்த இவர் , காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஹர்ஷலா.அடுத்ததாக சன் டிவியின் பெரிய ஹிட் தொடரான சந்திரலேகா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புது தொடர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகும் GUNDAMMA KATHA என்ற சீரியலின் புது சீசனில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.