சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் அதில் பிக்பாஸ் முதலிடத்தைப் பிடிக்கும் என சொல்லும் அளவிற்கு விஜய் டிவியின் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை நடைபெற்ற 4 சீசன்களோடு 5 வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் அறிவிப்பு வந்த நாளிலிருந்து பற்றிக்கொண்டது பிக்பாஸ் காய்ச்சல். இந்நிலையில் கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. முன்னதாக பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் பிரியங்கா, நடிகை பவானி ரெட்டி, நடிகை பிரீத்தி, நடிகர் நிழல்கள் ரவி, பிரபல மாடல் கோபிநாத், நிரூப் நந்தகுமார், அக்ஷ்ரா ரெட்டி, நமிதா மாரிமுத்து, ராஜூ ஜெயமோகன், பாடகி இசைவாணி மற்றும் மில்லா ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பு. தொடர்ந்து தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. இன்று தொடங்கும் பிக்பாஸ் 5 அறிமுக நிகழ்ச்சியின் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது அதிரடியான அந்த ப்ரோமொவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.