தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அசத்தி வருபவர் சமந்தா.பல படங்களில் தனது நடிப்பால் அசத்திய இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழ் தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியுள்ளார்,மேலும் தனி ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சமந்தா.

சமந்தா தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் இளம் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக அக்டோபர் 2017-ல் நடைபெற்றது.இவர்களை பார்த்து பலரும் இப்படி தான் நட்சத்திர ஜோடி இருக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தாவிற்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்க நடிப்பதை தொடர்ந்து வந்தார்.கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகவும் இருவரும் பிரிய உள்ளனர் எனவும் செய்திகள் பரவி வந்தன.இதற்கு ஏற்றார் போல சமந்தாவும் சில வாரங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றினார்.

தற்போது இது குறித்த மௌனத்தை கலைத்து சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பதிலளித்துள்ளனர்.இருவரும் தங்களது 4 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இவர்கள் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.