ஹெல்மெட் போட்டும் ஏற்பட்ட விபத்து.. விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த சோகம் – பின்னணி இதோ..

கண்ணில் பலத்த காயத்துடன் விஜய் டிவி பிரபலம் சக்திவேல் விவரம் உள்ளே -  Vijay Tv artist Sakthivel eyes injured | Galatta

விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு உறுதுணையாக நின்று பல நிகழ்சிகளில் நடித்து கொடுத்தவர் நடிகர் சக்தி வேல். இவர் விஜய் டிவி பிரபல ஷோக்களான கலக்கபோவது யாரு, அது இது எது போன்ற நிகழ்சிகளில் பங்கெடுத்து பிரபலமடைந்தவர். அதே நேரத்தில் நடிகர் சக்தி வேல் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைதளங்களில் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரீல்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி தனக்கென தனி பின் தொடர்பவர்களையும் சேர்த்து வைத்துள்ளார். மேலும் ஏமாளி என்ற யூடியூப் சேனல் ஒன்றில் முக்கிய நடிகராகவும் இருந்து வருகிறார் சக்தி வேல்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சக்திவேல் விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் கிடந்த கற்கள் சில லாரி டயரில் சிக்கி பின் வந்து கொண்டிருந்த அவரது கண்களில் பட அந்த இடத்திலே சக்தி வேல் மயங்கி உள்ளார். பின் அங்கிருந்த சிலர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின் சிகிச்சையில் அவரது ஒரு பக்க கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து சக்தி வேல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கண் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன். “ஹெல்மெட் போடலைன்னா 1000ரூ ஃபைன் போடுறாங்க..  ஆனால் நான் ஹெல்மெட் போட்டிருந்தேன். ஒருவேளை ஹெல்மெட் போடாமல் யாரவது அங்கு போயிருந்தால் கண்டிப்பா இறந்து போயிருப்பாங்க.. அரசி அதிகாரிகள் சாலையை கேவலாமா வெச்சிக்கிட்டு எங்களை எத்தனை நாள் இப்படி சாவடிக்க போறீங்க..” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். மேலும் தமிழ் நாடு முதல் மு க ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அந்த பதிவில் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay tv kuraishi shares incident with chef venkatesh bhat at cooku with comali set

இந்த பதிவையடுத்து சக்தி வேல் பின் தொடர்பவர்கள் அவரது ரசிகர்கள் தங்களது வருத்தங்களையும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

திரிஷா முதல் லோகேஷ் கனகராஜ் வரை..  CSK வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய பிரபலங்கள்... முழு பட்டியல் இதோ..
சினிமா

திரிஷா முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. CSK வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய பிரபலங்கள்... முழு பட்டியல் இதோ..

விரைவில் திருமணம்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் தந்தை.. - விவரம் உள்ளே..
சினிமா

விரைவில் திருமணம்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் தந்தை.. - விவரம் உள்ளே..

வெற்றி வாகை சூடிய CSK.. வைப் செய்து பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் – ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

வெற்றி வாகை சூடிய CSK.. வைப் செய்து பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் – ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..