“வெங்கடேஷ் பட் சாரோட 80 ஆயிரம் ரூபாய் ஷூ போச்சு..” CWC செட்டில் நடந்த சம்பவம் குறித்து குரேஷி... – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே

குக்கு வித் கோமாளி செட்டில் நடந்த சம்பவம் குறித்து குரேஷி வீடியோ உள்ளே - Kuraishi about chef venkatesh bhat | Galatta

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகளவு கவர்ந்து வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘குக்கு வித் கோமாளி’. கடந்த 2019 ல் தொடங்கப்பட்ட வித்யாசமான சமையல் போட்டி நிகழ்ச்சி தான் குக்கு வித் கோமாளி. சமையல் ஒரு புறம் வேடிக்கையான கோமாளிகளின் குறும்புகள் ஒரு புறம் என்று பார்வையாளர்களை சிரிக்க வைத்து மிகப்பெரிய வெற்றியடைந்து தற்போது 4 வது சீசனில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் சரி கோமாளியாக கலந்து கொண்டாலும் சரி மக்களிடம் எளிதாக பிரபலமாகி விடலாம். அந்த வகையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அஷ்வின், புகழ், பாலா, தர்ஷன், ஸ்ருதிகா, கனி, ஷகீலா என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும், இந்த வரிசையில் பார்வையாளர்களுக்கு மிக பிடித்த கோமாளியாகவும் எபிசொடிற்குக் எபிசொட் வித்யாசம் கொடுத்து தனித்து தெரிபவராகவும் இருந்து வருபவர் குரேஷி..

அதே விஜய் தொலைகாட்சியில் ஒலிப்பான கலக்க போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டி சென்றவர் குரேஷி. இடையே சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் குரேஷி வாழ்கையை மாற்றுமளவு வந்த வாய்ப்பு குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் குரேஷி க்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. சமீபத்தில் விஜய் தொலைகாட்சியினால் சிறந்த நகைச்சுவை கலைஞர் விருதினை குரேஷி பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் குரேஷி அவரது தொலைக்காட்சி பயணம் குறித்தும் குக்கு வித் கோமாளி செட்டில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் சமையல் கலை வல்லுநர் வெங்கடேஷ் பட் அவர்களுடன் செய்த மறக்க முடியாத சேட்டை குறித்து கேட்கையில் அவர், “போன குக்கு வித் கோமாளி சீசன் ல ஒரு நாள் பட் சார் என்னோட கண்ணாடி அது இதுனு எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டாரு.. சரி நம்ம எதனா பண்ணுவோம்னு அங்க இருந்த எண்ணெய் பாட்டில் இருந்தது. அதுல கொஞ்சம் அவர் போட்டிருந்த ஷூவில் தெளிச்சு விட்டன். அவர் அப்போவே இரண்டு அடி போட்டார். அப்பறம் தான் அவரு சொன்னார் அந்த ஷூ விலை 80,000 ரூபாய் மேல னு. அந்த எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது அது போகவே போகாதுன்னு.. திரும்பவும் அத சொல்லி இரண்டு அடி போட்டாரு.. “ என்றார் குரேஷி .

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்தும் தன் தொலைக்காட்சி பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை குரேஷ் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

விரைவில் திருமணம்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் தந்தை.. - விவரம் உள்ளே..
சினிமா

விரைவில் திருமணம்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் தந்தை.. - விவரம் உள்ளே..

வெற்றி வாகை சூடிய CSK.. வைப் செய்து பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் – ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

வெற்றி வாகை சூடிய CSK.. வைப் செய்து பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் – ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட அதிரடியான அப்டேட் -   உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட அதிரடியான அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..