வெற்றி வாகை சூடிய CSK.. வைப் செய்து பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன் – ரசிகர்களால் வைரலாகும் Glimpse இதோ..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றியை இசையுடன் கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் - Santhosh narayanan special song for CSK wins IPL | Galatta

ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தின் மத்தியில் ஐபிஎல் 2023 தொடர் முடிவு பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மோதியது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு எதிராக குஜராத் அணி மிரட்டலாக விளையாடி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை சென்னை அணிக்கு கொடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கிய முதல் ஓவரிலே மழை குறிக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக கடந்த மே 28 நடைபெறவிருந்த இறுதி போட்டி மழையினால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின் மழை நீண்ட நேரம் பெய்த காரணத்தினால் இரண்டாவது இன்னிங்க்ஸ் 15 ஓவர் என்ற கணக்கில் 171 ரன்களாக சென்னை அணிக்கு கொடுக்கப்பட்டது. பின் களம் இறங்கிய சென்னை அணி மிரட்டலாக தன் பங்களிப்பை கொடுத்தது. இறுதி நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தினால் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. அதன்படி எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபார வெற்றியை சென்னை ரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். போட்டியை காண இயக்குனர் விக்னேஷ் சிவன். வரலக்ஷ்மி சரத் குமார், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் அவர்களின் இரு மகன்கள், நடிகர் சதீஷ் என்று பல தமிழ் சினிமா பிரபலங்கள் மைதானத்தில் போட்டியை நேரில் பார்த்து கொண்டாடினர். இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் சென்னை அணிக்காகவும் எம் எஸ் தோனிக்காகவும் விரைவாக தரமான பாடல் ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இரவோடு இரவாக விரைவாக சென்னை வெற்றியை வைப் செய்து பதிவு செய்த பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சென்னை அணியில் மாபெரும் வெற்றியையடுத்து ரசிகர்களுக்கு சந்தோஷ் நாரயணனின் பாடல் கூடுதல் உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

C S K !!! #IPLFinals #MSDhoni𓃵 pic.twitter.com/9d9kxGpT7H

— Santhosh Narayanan (@Music_Santhosh) May 29, 2023

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ படத்திற்கும் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் புரோஜக்ட் கே படத்திற்கும் இசையமைத்து வருகிறார். மேலும் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கும் அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாழை படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுக்கி மாதிரி இருக்க.. விமர்சனத்திற்கு விளாசிய பிக்பாஸ் அனிதா சம்பத்.. - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொறுக்கி மாதிரி இருக்க.. விமர்சனத்திற்கு விளாசிய பிக்பாஸ் அனிதா சம்பத்.. - வைரலாகும் பதிவு இதோ..

24 வது நாளிலும் வசூல் வேட்டையில் தீவிரம்..  உற்சாகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு.. – வசூல் விவரம் உள்ளே..
சினிமா

24 வது நாளிலும் வசூல் வேட்டையில் தீவிரம்.. உற்சாகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு.. – வசூல் விவரம் உள்ளே..

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

குடும்பங்கள் கொண்டாடும் ‘கழுவேத்தி மூர்க்கன்’.. அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..