விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அன்புடன் குஷி.சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த தொடரில் இரண்டு ஹீரோயின்கள் மாறி தற்போது இந்த தொடரின் நாயகியாக திருமணம் தொடரின் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார்.லோகேஷ்,குக் வித் கோமாளி புகழ் தீபா,மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.

மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தொடரின் நாயகன் ப்ரஜின் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவருக்கும் தனித்தனியே பெரிய ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

பல தடைகளை தாண்டி இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்,இந்த வீடீயோவை தொடரின் நாயகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.