விஜய் டிவியின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.

முதல் நாளில் பிக்பாஸ் வீட்டின் கேப்டன்கள் தேர்வு நடைபெற்ற நிலையில், நேற்று கடந்து வந்த பாதை சுற்று நடைபெற்றது. இதில் பாடகி இசைவாணி மற்றும் பாடகி சின்னப்பொண்ணு அவர்களது வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி மிக உருக்கமாக பேசி மற்ற போட்டியாளர்களை கண்கலங்க வைத்தனர்.

தொடர்ந்து யூ-ட்யூபர் அபிஷேக்கை, VJ பிரியங்கா கலாய்ப்பது மற்றும் அபிஷேக் அவரது தாயார் பற்றி நினைத்து உருகுவது என நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், இன்றைய (அகடோபர் 6) நிகழ்ச்சியின் பரபரப்பான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியானது.

இன்றைய நிகழ்ச்சியிலும் கடந்து வந்த பாதை சுற்று தொடர்கிறது. நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அவரது வாழ்க்கையில் நடைபெற்ற கடினமான நிகழ்வுகளை அவருடைய பாணியில் பகிர்ந்து கொள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் பல மாற்றுக்கருத்துக்கள் எழ பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஆரம்பிக்கிறது.

நிரூப் நந்தகுமாரிடம் சிபி சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட, “சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல” என நமிதா சொல்ல அனல் பறக்கும் விவாதங்கள் இன்றைய நிகழ்ச்சியில் இருக்கும் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ப்ரோமோ வீடியோ. அதிரடியான இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.