சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.இந்த படத்தில் காயத்ரி,அனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது விஜய்சேதுபதி , சீனு ராமசாமி இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக  தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல் ,தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றியுள்ளனர்.மாமனிதன் படத்திற்கு இளையராஜா,யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பே வெளிவர வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் தமிழக மற்றும் கேரளா உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியிருந்தார்.பல முறை தள்ளிப்போன இந்த படம் ஜூன் 24ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.பல விருதுகளை இந்த படம் அள்ளும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT நிறுவனமான ஆஹா தமிழ் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

மாமனிதன் படக்குழுவினருக்கு ஆஹாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️

Happy to have bagged the digital rights for #Maamanithan.#aha100PercentTamil #ahaThattunaTamilMattume @seenuramasamy @VijaySethuOffl @thisisysr @studio9_suresh pic.twitter.com/p9xpropOe0

— aha Tamil (@ahatamil) June 24, 2022