“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்!”- விஜய் ஆண்டனி தனது மூத்த மகளின் மறைவுக்கு பின் வெளியிட்ட முதல் உருக்கமான அறிக்கை!

விஜய் ஆண்டனி தனது மகளின் மறைவுக்கு பின் வெளியிட்ட உருக்கமான அறிக்கை,vijay antony first statement after his daughter death | Galatta

தனது மகள் மீராவின் மறைவுக்கு பிறகு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி முதல் முறையாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா கடந்த செவ்வாய்க் கிழமை அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகளான மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மீராவை உடனடியாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்திற்கு பேரிழப்பாக அவரது மகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல் திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்தாருக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். தொடர்ந்து விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்களின் நல்லடக்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஒரு தேவவாலயத்தில் அதற்கான சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றது. கடைசி நொடியில் தனது மகளை நல்லடக்கம் செய்யும் நேரத்தில் அவரது தாயார் பாத்திமா கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரது மனதையும் உலுக்கியது.

வெறும் 16 வயதில் யாரும் எதிர்பாராத விதமாக நேர்ந்த மீராவின் மறைவு விஜய் ஆண்டனி அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் மீளா துயரத்திற்குள் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் தனது மகளின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக கணத்த இதயத்தோடு மனம் திறந்த விஜய் ஆண்டனி அவர்கள் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டணி" என தெரிவித்திருக்கிறார். படித்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்த விஜய் ஆண்டனி அவர்களின் அந்த உருக்கமான அறிக்கை இதோ…
 

pic.twitter.com/Kt5EUSlZFq

— vijayantony (@vijayantony) September 21, 2023