தமிழ் திரையுலகில் எதார்த்த படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக நியூயார்க் நகரத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். ஷாப்பிங் மால் ஒன்றில் நயன்தாரா காஃபி குடித்தபடி சிரிக்கும் அந்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும், அந்த புகைப்படத்துக்கு கேப்ஷனாக சுற்றுலாக்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்றும், இது நியூயார்க் நினைவுகள் என்றும், கொரோனா வைரஸே சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போய்விடு என்றும் ட்ராவல் குறித்து ஃபீல் செய்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படம் என்றால் அது நானும் ரவுடி தான். இந்நிலையில், அதே கூட்டணியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துடன் களமிறங்கவுள்ளார். விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💓💓💓 #missingtravel #gocorona #coronagoaway #newyorkcity #newyorktimes #newyork

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on