“இந்த காட்சிகளெல்லாம் iPhone ல எடுத்தோம்..” ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..

விடுதலை படத்தில் சந்தித்த சவால்கள் குறித்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் - Cinematographer velraj about viduthalai shooting spot light sequence | Galatta

நேர்த்தியான காட்சிகளை அமைப்பதும் வித்யாசமான ஒளிப்பதிவு காட்சியலை கொடுப்பதிலும் சிறந்து விளங்கிய வேல்ராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களிடம் பணியாற்றி முன்னணி ஒளிப்பதிவாளரானார் அதே நேரத்தில் சமகால தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த பெரும்பாலான திரைப்படங்களின் ஒளிப்பதிவு வேல்ராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது அதன்படி சிறுத்தை, 3, கொம்பன், பாயும் புலி, மருது, கடைக்குட்டி சிங்கம் மற்றும் பல. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தனுஷ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வேல்ராஜ். அதை தொடர்ந்து மீண்டும் தனுஷ் கூட்டணியில் ‘தங்கமகன்’ திரைப்படத்தை இயக்கினார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் படங்களில் மிக முக்கியமான படங்களாகவும் ரசிகர்களினாலும் உலக மேடைகளினாலும் கொண்டாடப்பட்ட படங்களாகவும் இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் இருந்து வருகின்றது. அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியா பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்து அட்டகாசமான காட்சியலை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். தற்போது அவர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் இணைந்து விடுதலை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசல் படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் வேல்ராஜ் வெற்றிமாறன் கூட்டணியில் அமைந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விடுதலை முதல் பாகம் படம் குறித்து வேல்ராஜ் அவர்கள் நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் விடுதலை படமாகும் போது சவாலாக இருந்த சில விஷயம் குறித்து அவர் பேசுகையில்,

"சில காட்சிகளெல்லாம் Iphone ல எடுத்திருப்போம். ஏனென்றால் வேறு வழி கிடையாது. கேமிரா எடுத்துட்டு போன செடி ஆடிடும். அது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும். அந்த செடி ஆடமால் இருக்கனும்னா சின்ன கேமரா பயன்படுத்தனும். அதனால மொபைல் ல கிம்பள் போட்டு பண்ணோம். என்றார் வேல்ராஜ் மேலும் தொடர்ந்து

"இந்த படத்துக்கு பெரிய பெரிய லைட் கொண்டு போய் படம் பண்ண முடியாது. ஏன்னா அந்த இடத்துல சாத்தியம் இல்லை. காற்று , மலை மேல் அதை ஏற்றி கொண்டு வருவது இது போன்ற நிறைய விஷயம் தடங்களா இருந்தது. ஒரே படப்பிடிப்பு தளமா இருந்தா எப்படியாவது பண்ணிடலாம்.ஆனா தினம் ஒரு இடம் மாறும். அதுமட்டுமல்லாமல் நம்மதான் அந்த காடு பகுதிகளில் வழி பாதையையே உருவாக்குகிறோம்.  உள்ளூர் மக்கள் உதவியோடு தான் பல விஷயங்கள் செய்தார்கள். அதனால் அதற்கு சாத்தியம் இல்லை.

200 வாட்ஸ் LED லைட் கிட்டத்தட்ட 1200 லைட்ஸ் கட்டினோம். அப்படி செய்தால் தான் படத்திற்கான லைட் கிடைக்கும். எல்லாமே மரத்தில் கட்டினோம். ஒவ்வொரு மரத்தில் கட்றதுக்கும் 10 நிமிஷமாவது ஆகும். 2 நாள் முன்னாடி படம் எடுக்க போறோம் னா இந்த ஏற்பாடுகள் இன்னிக்கே தயாரா இருக்கும்." என்றார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

மேலும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்  அவர்கள் விடுதலை படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ..

“வாழ்த்து வெள்ளத்தில் மகிழ்ந்து வருகிறேன்” விடுதலை திரைப்படத்தின் வரவேற்பையடுத்து  மனம் நெகிழ்ந்த சூரி...-  வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வாழ்த்து வெள்ளத்தில் மகிழ்ந்து வருகிறேன்” விடுதலை திரைப்படத்தின் வரவேற்பையடுத்து மனம் நெகிழ்ந்த சூரி...- வைரலாகும் பதிவு இதோ..

மறைந்தார் பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்.. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

மறைந்தார் பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்.. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

ஒரே படத்தில் அஜித், விஜய்..? கதை ரெடி...ஏ ஆர் முருகதாஸ் கொடுக்கும் விளக்கம் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..