கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் இயங்காத காரணத்தினால் நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக கிளம்பியுள்ளனர். 

Venkat Prabhu

இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவை செய்துள்ளார். அதில் ஏன் திடீர் பீதி சென்னை ?. நான்கு நாட்கள் கடும் லாக்டவுனுக்கு ஸ்டாக் ஓட சேர்த்து வைரஸையும் வாங்கிட்டு வந்துருவாங்க போல இருக்கே. 4 நாளும் பிரியாணி சமைக்க போறாங்களோ. பொறுமையாக இருங்கள். இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். 

Venkat Prabhu

இந்த லாக்டவுன் நாட்களில் பல விழிப்புணர்வு பதிவுகள், சென்னை 28 ஸ்டைலில் விழிப்புணர்வு வீடியோ என தன்னால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். லாக்டவுன் நாட்களுக்கு பிறகு மாநாடு ஷூட்டிங்கை தொடங்கவுள்ளார் வெங்கட் பிரபு.