தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, கோவா போன்ற எதார்த்தமான கதையம்சம் கொண்டு கலக்கும் இயக்குனர். இவரது படைப்பில் கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. ஒரு உச்ச நட்சித்திரம் நடிக்கும் 50-வது படம் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை உருவாக்கிய பெருமையும் வெங்கட் பிரபுவை சேரும். 

mangatha mangatha

பத்து வருடங்கள் முன்பு இதே நாளில் ட்விட்டரில் தான் செய்த பதிவை நினைவு கூர்ந்தார் வெங்கட் பிரபு. மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற இன்டெர்வெல் காட்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த காட்சியை படம்பிடித்த போது, தல அஜித் செய்த பிரியாணியை பற்றி பதிவு செய்துள்ளார். 

VenkatPrabhu venkatprabhu

தற்போது STR வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், SJ சூர்யா, மனோஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.