2006-ம் ஆண்டு வெளியான பிரஜாபதி எனும் மலையாள படம் மூலமாக நடிப்பில் இறங்கினார் அதிதி. அதன் பின் தமிழில் ஸ்ரீநகரம் எனும் படத்தில் நடித்தாலும், ஹிந்தியில் வெளியான டெல்லி-6 திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி. 

சமீபத்தில் அதிதி ராவ் நடித்த சுஃபியும் சுஜாதாயும் மலையாள திரைப்பட ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகவுள்ளது. 

விஜய் பாபு தயாரிப்பில் நரணிபுழா ஷானவாஸ் இயக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். அணு மூதேதத் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது படத்திலிருந்து வதிக்கலு வெள்ளரிப்ரவு பாடல் வீடியோ வெளியானது. ரொமான்டிக் பாடலான இந்த பாடலை அர்ஜுன் கிருஷ்ணா, நித்யா மற்றும் ஜியா உல்ஹா பாடியுள்ளனர். ஹரிநாராயணன் மற்றும் ஷபி பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.