போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று மக்கள் செல்வியாக உயர்ந்து நிற்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெல்வெட் நகரம் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து டேனி, சேஸிங் போன்ற படங்கள் வரலக்ஷ்மி கைவசம் உள்ளது. 

Varalakshmi Clarifies About Marriage Rumours

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் செய்த பதிவில், எனக்கு கல்யாணம் என்றால், அச்செய்தி எனக்குத்தான் கடைசியா தெரிகிறது. ஹாஹாஹா...அதே முட்டாள்தனமான வதந்திகள்..என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு அப்படியென்ன ஆசைன்னு தெரிய வில்லை.

Varalakshmi Clarifies About Marriage Rumours

எனக்கு கல்யாணம் நடக்கும் போகிறது என்றால்,அனைவரிடமும் வெளிப்படையாக கூறுவேன். கூரை மேலே ஏறி கத்தி சொல்லுவேன். போதுமா? இதைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கும் மீடியா மக்களே, நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கலை. சினிமாவைவிட்டு விலகறதா இல்லை என்று தன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாக போட்டுடைத்தார்.