2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

Jyothikas Ponmagal Vandhal Movie Trailer On 21 May

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். சில நாட்கள் முன்பு படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மே 29-ம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாகும் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. 

Jyothikas Ponmagal Vandhal Movie Trailer On 21 May

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மே 21-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், படங்களை ஓ.டி.டி எனப்படும் டிஜிட்டல் ரிலீஸாகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ஜோதிகா ரசிகர்கள்.