கடந்த 2003-ம் ஆண்டு தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் சாயா சிங். இந்த படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் உலகளவில் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அருள், திருப்பாச்சி, பவர் பாண்டி, ஆக்‌ஷன் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். 

Chaya Singh Recreates Manmadha Rasa Song

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

Chaya Singh Recreates Manmadha Rasa Song

இந்நிலையில் நடிகை சாயா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கருடன் மன்மத ராசா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் ஒரு வருடத்திற்கு முன் சிவஷங்கர் மாஸ்டரை பார்த்த போது எடுத்த வீடியோ இது. இந்த வீடியோவை தனது பிறந்தநாள் ட்ரீட்டாக தந்துள்ளார் சாயா சிங். திரைப்படங்கள் தவிர்த்து சீரியல் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாயா சிங்.