தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் அவர் ஏகத்துக்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் பிசியாகிவிட்டார் வனிதா. தற்போது அவரை தேடி பட வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து பாம்பு சட்டை படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாம். 

கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக வனிதா தன் உடல் எடையை லைட்டாக குறைத்து, ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ, என்ன விஷயம் என்று கேள்வி எழுப்பினார்கள். படத்தில் நடிக்க தான் வனிதா இப்படி மாறியிருக்கிறார் போன்று.

லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கினார். அந்த சேனலை துவங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனிதா. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளங்களில் வனிதா, பீட்டர் பால் பற்றி தான் பேச்சாக இருந்தது. பிக் பாஸ் 4 திட்டமிட்ட நேரத்தில் துவங்காமல் போனது நல்லது தான், வனிதா விஷயம் அதை விட சுவாரஸ்யமாக இருக்கிறது என்று பலர் தெரிவித்தனர். 

அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அவர்கள் வாழ்க்கையை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். வனிதாவின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. சோலோ ஹீரோயினாக களமிறங்கும் வனிதாவை வாழ்த்தி வருகின்றனர் திரை ரசிகர்கள்.