சந்திரலேகா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். பிக் பாஸ் 3 வீடு பரபரப்பாக இருந்ததற்கு காரணமே வனிதா தான். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தான் அவ்வப்போது பேசப்படுகிறது. சில நாட்கள் முன்பு வீட்டில் லக்ஷ்மி குபேரன் பூஜை செய்து பதிவு செய்திருந்தார் வனிதா. விஜய் டிவியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை துறையில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்து விட்டு தாமரைப்பாக்கத்தில் மீளா துயில் கொண்டிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்த உடனே நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். 

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு செய்தி அறிந்து சோகத்தில் இருக்கும் நடிகை குஷ்பு, நம்முடன் இருப்பவர்கள் இருக்கும் போது அவர்களை பற்றித் தெரியாது. இல்லாமல் நினைவாகும் போது தான் அவர்களின் உண்மையான மதிப்பு புரிகிறது என பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டை ஷேர் செய்த நடிகை வனிதா விஜயகுமார். ஆமாம்.. உண்மை தான் என்று ரீட்வீட் செய்திருந்தார்.

பாடும் நிலா பாலுவின் இறுதி சடங்கில் சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நடிகர் விஜய் கலந்து கொண்டது. ரசிகர்களின் காலணியை எடுத்துக் கொடுத்தது என ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் நெகிழ வைத்து விட்டார். ஏகப்பட்ட பிரபலங்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். நடிகை வனிதா விஜயகுமாரும் விஜய், எஸ்.பி.பி பற்றிய ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்டில், எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அவர் என்னை ஒரு மாதிரி லுக் விட்டு பார்த்துட்டு எனக்காக பாடுவார் என ஒரே ட்வீட்டில் எஸ்.பி.பியையும் விஜய்யையும் பற்றி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அதற்காக செய்து கொண்ட மேக்கப்புடன் ஆளே மாறி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் #NewProfilePic என கேப்ஷன் செய்துள்ளார்.