தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். தமிழ் இண்டஸ்ட்ரியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாய் விளங்கி வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். உலகளவில் உள்ள திரை விரும்பிகளான அவரது ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றி வருகிறார்கள். இன்ஸ்டாக்ராமில் அவரை 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். 

இன்ஸ்டாகிராமில் த்ரிஷா வெளியிடும் புகைபடங்கள் ஒவ்வொன்றுக்கும் மிக அதிக அளவில் லைக்குகள் குவியும். மேலும் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பதை த்ரிஷா ஒருபோதும் செய்ததில்லை. 

மற்ற நடிகைகள் சோப்பு விளம்பரம், காஸ்மெட்டிக்ஸ் விளம்பரம் என செய்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவு சம்பாதிக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா ஒருபோதும் அப்படி செய்ததில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் குறைந்த புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. மற்ற பழைய புகைப்படங்களை திடீரென நீக்கிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று தான் ரசிகர்களும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். 

இந்நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், கில்லி மற்றும் 96 படத்தின் ஒரே மாதிரியான காட்சியை பகிர்ந்துள்ளார். இது தெரியாம போச்சே என்று வீடியோவை பார்த்த ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கில்லி படத்தில் வரும் தனலக்ஷ்மி பாத்திரமும், 96 படத்தில் வரும் ஜானு பாத்திரமும் ஹீரோவை விட்டு விமான நிலையத்தில் இருந்து பிரிந்து செல்கின்றனர். ஒரே மாதிரியாக இருக்கும் இந்த காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து அசத்தினார் த்ரிஷா. கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார். 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது. கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். த்ரிஷா நடிப்பில் ராங்கி, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.