தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா.தமிழில் கடைசியாக இவர் 96,பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Trisha Emotional Post About Her Birthday Wishes

இவர் நடிப்பில் தயாராகியுள்ள பரமபத விளையாட்டு,கர்ஜனை,ராங்கி உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trisha Emotional Post About Her Birthday Wishes

பல பிரபலங்கள் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.நேற்று பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷாவிற்கு ரசிகர்களிடமிருந்தும்,பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக த்ரிஷா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார் எனது பிறந்தநாளை கொண்டாடுவத்தில் நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை,ஆனால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் காட்டும் அன்பு கூடிக்கொண்டே இருக்கிறது.இதனை அன்பையும் பெறுவதற்கு நான் சிலர் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்களை செய்துள்ளேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.