இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு புரட்சித்தளபதி விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், வினய், அனு இமானுவேல், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் துப்பறிவாளன். விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் இந்த படம் உருவானது. இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளிவரும் என்றார் இயக்குனர். 

myskin

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் லண்டனில் லொகேஷன் தேடும் பணியில் இருப்பதாக நடிகர் பிரசன்னா தன் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அங்கு ஷெர்லோக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.

thuparivalan

இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பாகம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படமாக்கப்படுமோ என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஹாலிவுட் சீரிஸ் பாணியில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

prasanna