தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர். தளபதி விஜய் குறித்த செய்தி வந்த உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தை அசத்தி வருகிறது. 

Thalapathy Vijays Abroad Trip Photo Goes Viral

நடிகர் விஜய் தன் கல்லூரி நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் அறிந்ததே. தளபதியின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நண்பர்களுடன் ஃபாரின் டூர் சென்றபோது எடுத்த போட்டோ தான் அது. 

Thalapathy Vijays Abroad Trip Photo Goes Viral

சின்னத்திரை சூப்பர்ஸ்டாரான சஞ்சீவ், தளபதியுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். லாக்டவுன் முடிந்தவுடன் விரைவில் நண்பர்களுடன் அடுத்த டூர் தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.