தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் இணைகிறார். விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை இன்று டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கும் தளபதி 67 திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக நடிகர் சிலம்பரசன்.TR பாடியுள்ள தீ தளபதி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் சிலம்பரசன்.TR அட்டகாசமாக நடனமாடும் தளபதி விஜயின் வாரிசு பட தீ தளபதி பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…