தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான சூர்யா அவர்களின் திரைப்பயணத்தில் திருப்புமுறையாக அமைந்த திரைப்படம் நந்தா. இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படத்தை தொடர்ந்து நடித்த பிதாமகன் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நந்தா & பிதாமகன் படங்களை தொடரந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட வணங்கான் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வணங்கான் திரைப்படம் குறித்து பல விதமான செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் தற்போது வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,
வணக்கம்,
என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய
திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. எனவே 'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்'-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்…
என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வணங்கான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
 

பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். 🙏🏼 #Vanangaan pic.twitter.com/8jgJJtXyWI

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 4, 2022