"பெரியாரும் பிள்ளையாரும்!"- கவனம் ஈர்க்கும் இயக்குனர் பாலா - அருண் விஜயின் வணங்கான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

இயக்குனர் பாலா - அருண் விஜயின் வணங்கான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,director bala arun vijay in vanangaan movie first look out now | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் மிகவும் அழுத்தமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை அந்தக் கதைக்களங்கள் நடக்கும் உலகத்திற்கே மக்களை அழைத்துச் சென்று அதன் பாதிப்பை உணர வைக்கும் வகையில் தரமான படைப்புளாக கொடுத்து வரும் வருபவர் இயக்குனர் பாலா. அந்த வகையில் இயக்குனர் பாலா அவர்களின் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களாக கொண்டாடப்படுகின்றன. கடைசியாக இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான கவனத்தை பெறவில்லை என்றாலும் அவரது அடுத்தடுத்த படைப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தனது வணங்கான் திரைப்படத்தை இயக்குனர் பாலா உருவாக்கி வருகிறார்.

இந்த வணங்கான் திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அருண் விஜய் கதை நாயகனாக நடிக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வெளிவந்த ஃபேமிலி என்டர்டைனர் ஆக்சன் படமான யானை படமும் கிரைம் திரில்லர் படமாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த சினம் படமும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் மிஷன் - சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அது போக பார்டர் மற்றும் அக்னி சிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளிவருவதற்காக காத்திருக்கின்றன. இந்த வரிசையில் தனது அடுத்த படமாக வணங்கான் படத்தில் இயக்குனர் பாலா உடன் இணைந்திருக்கிறார் அருண் விஜய்.

மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து கதிர் நடிப்பில் வெளிவந்த ஜடா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஏமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல இளம் நடிகை ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர்கள் சமுத்திரகனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வணங்கான் திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. உடல் முழுக்க சேற்றுடன் ஒரு கையில் பெரியாரும் ஒரு கையில் பிள்ளையாரும் வைத்திருக்கும் அருண் விஜயின் இந்த வணங்கான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அட்டகாசமான அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Here's electrifying first look of @IyakkunarBala's #Vanangaan @arunvijayno1@roshiniprakash_@thondankani@DirectorMysskin@Vairamuthu@gvprakash@editorsuriya@rk_naguraj@silvastunt @VHouseProd_Offl@memsundaram @johnmediamanagr #Bstudios pic.twitter.com/U6RPWinAs9

— sureshkamatchi (@sureshkamatchi) September 25, 2023