தன் வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த 'பிகில்' பாண்டியம்மா.. இந்திரஜாவிற்கு குவியும் வாழ்த்துகள் – விவரம் உள்ளே..

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் இந்திரஜா சங்கர் விவரம் உள்ளே - Indhiraja robo Shankar getting married post goes viral | Galatta

தமிழ் தொலைகாட்சிகள் மற்றும் திரைப்படங்களில் தன் அசத்தலான நகைச்சுவை திறமை மூலம் பிரபலமடைந்தவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா அவர்கள் தமிழ் திரையுலகில் கடந்த 2019 ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். மேலும் தற்போது பல படங்களில் இந்திரஜா ஷங்கர் நடித்து வருகின்றார். இதனிடையே கடந்த 2021 ல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தொலைக்காட்சி ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார் இந்திரஜா ஷங்கர்.

இந்திரஜா பொதுவாகவே சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனியாகவும் அவாது குடும்பத்தாருடனும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார். இதில் குறிப்பாக கார்த்திக் என்பவருடன் நிறைய ரீல்ஸ்களையும் புகைப்படங்களையும் அதிகளவு பதிவிட்டு அதனுடன் மாமா என்ற பதிவையும் பகிர்வார். இது குறித்து இந்திரஜா ரசிகர்கள் ‘இருவரும் காதலிக்கிறீர்களா?’ என்று தொடந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் "நீங்க இந்திரஜாவைத் திருமணம் செய்யப் போறீங்களா?" எனக் கேட்க, அதற்கு கார்த்திக், "ஆமா... தேதி இன்னும் முடிவு பண்ணல. பண்ணதும் சொல்றோம்!" என்று பதில் சொல்ல, இந்திரஜா அதை தொடர்ந்து அந்த பதிவில், "இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்! என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்!" என்று பதில் அளித்திருக்கின்றார். இதையடுத்து இவர்களின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

master mahendran reply to lokesh kanagaraj lcu fans theory viral post here

இந்திரஜா காதலித்து வரும் கார்த்திக் என்பவர் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவர் ரோபோ ஷங்கர் அவர்களின் உறவினர் முறை. தற்போது இவர்களின் பதிவின் மூலம் இருவரது திருமணம் உறுதியாகியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

master mahendran reply to lokesh kanagaraj lcu fans theory viral post here

சூப்பர் ஹீரோவாக திரையரங்குகளில் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி.. – ‘வீரன்’ படத்தின் கலகலப்பான காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ
சினிமா

சூப்பர் ஹீரோவாக திரையரங்குகளில் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி.. – ‘வீரன்’ படத்தின் கலகலப்பான காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ

 “என்கிட்ட சொந்த வீடு கிடையாது.. நிலம் கிடையாது..” உண்மையை உடைத்த சித்தார்த் – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

“என்கிட்ட சொந்த வீடு கிடையாது.. நிலம் கிடையாது..” உண்மையை உடைத்த சித்தார்த் – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..

ரசிகர்களை கவர்ந்த தீராக் காதல்.. திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ இதோ..
சினிமா

ரசிகர்களை கவர்ந்த தீராக் காதல்.. திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ இதோ..