ரசிகர்களை கவர்ந்த தீராக் காதல்.. திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ இதோ..

தீரா காதல் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு வைரல் வீடியோ இதோ - Theera kaadhal deleted scene out now | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியாமானவை லைகா தயாரிப்பு நிறுவனம். தமிழில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர்கள் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பான் இந்தியா வெற்றிக்கு பின் இந்திய அளவு பிரபலமானவர்கள். தமிழில் இதற்கு முன்பு ஷங்கரின் 2.0 படத்தையடுத்து லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் பெரிய திரைப்படம் இதுவாகும் இப்படத்தின் இமாலய வெற்றியையடுத்து இந்த ஆண்டு திருவின் குரல், பொன்னியின் செல்வன் 2  படங்கள் வெளியாகி மேலும் கோடிகளை குவித்தது. தற்போது லைகா நிறுவனம் தமிழில் அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வரும் இந்தியன் 2, ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கி வரும் லால் சலாம் அதை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் ‘விடா முயற்சி’ ஆகிய திரைப்படங்கள்  அடுத்தடுத்து தயாரிப்பில் வெளியாகவுள்ளது.

இதனிடையே லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘தீராக் காதல்’. அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவடா நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தீராக் காதல் படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் முன்னதாக ரசிகர்களை கவர்ந்து வைரலானது குறிப்பிடத்தக்கது. முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியது. அதன்படி தீராக் காதல் திரைப்படம் கடந்த மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஒரு பீல் குட் திரைப்படம் என்று ரசிகர்கள் கொண்டாடிய இப்படத்தில் திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சியினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஜெய் வீட்டிற்கு அவரது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷ் வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பதட்டத்துடன் நகரும் காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

'சந்திரமுகி 2' படத்தையடுத்து தமிழில் மிக முக்கியமான திரைப்படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி.. - வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

'சந்திரமுகி 2' படத்தையடுத்து தமிழில் மிக முக்கியமான திரைப்படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி.. - வைரலாகும் அப்டேட் இதோ..

“இவங்க இல்லன்னா இந்த 20 வருஷம் இல்லை..” மேடையில் உடைந்து அழுத சித்தார்த்.. – Exclusive Interview இதோ..
சினிமா

“இவங்க இல்லன்னா இந்த 20 வருஷம் இல்லை..” மேடையில் உடைந்து அழுத சித்தார்த்.. – Exclusive Interview இதோ..

நாட்டையே உலுக்கிய ஓடிசா ரயில் விபத்து.. 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..! - இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. விவரம் உள்ளே..
சினிமா

நாட்டையே உலுக்கிய ஓடிசா ரயில் விபத்து.. 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..! - இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. விவரம் உள்ளே..