தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்துள்ள மாநாடு திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. முன்னதாக மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாடல்களுக்காக ரசிகர்கள் அனைவரும் வெகுவாக காத்திருந்தனர். மாநாடு படத்தின் பாடல் உரிமைகள் அனைத்தையும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் U1ரெக்கார்ட்ஸ் பெற்றது என அறிவிக்கப்பட்டிருந்தது.  

இதற்கிடையே சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலான “மாஷா அல்லாஹ்” என்ற பாடல் வருகிற 21-ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்திருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்தில் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தின் அதிரடியான சில அப்டேட்களை அறிவித்தார்.100 % இத்திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் கட்டாயமாக OTTயில் வெளியாகாது என அறிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற பக்ரீத் தினத்தன்று வெளியாகலாம் என்றும் திரைப்படம் அநேகமாக ஆகஸ்ட் மாதம் அல்லது ஆயுத பூஜை நாட்களில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நடித்து வெளிவர இருக்கும் மாநாடு திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நடிகர் சிலம்பரசன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆத்மன் என குறிப்பிட்டு நடிகர் சிலம்பரசன் பகிர்ந்துள்ள இந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.