இந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் தமன்னா. 2005-ம் ஆண்டு திரையில் கால் பதித்த தமன்னா, 15 வருடங்களாக என்டர்டெயின் செய்து வருகிறார். நடிகை தமன்னாவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். இதுகுறித்து, நடிகை தமன்னா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்தோம், தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார். தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக நடிகை தமன்னா ஐதராபாத் வந்தார்.

அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதுபற்றி நடிகை தமன்னா எதுவும் கூறாமல் இருந்தார். பின்னர் உறுதி செய்தார்.

தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தானும் தனது டீமும் பாதுகாப்பாக இருந்தும் கொரோனா பாதித்துவிட்டது, மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தேன். குணமானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். இப்போது நன்றாக உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அவர் மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டுக்குள் காரில் வந்து இறங்கியதும் அவர் பெற்றோர், தமன்னாவைக் கட்டித்தழுவி வரவேற்கின்றனர். பின்னர் அவர் வீட்டுக்குள் செல்லும்வரை வீடியோவாக அவர் உறவினர் எடுத்துள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். 14 நாள் தனிமைக்குப் பிறகு வீட்டுக்கும் திரும்பி விட்டேன். நான் நலம்பெற பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா. வீட்டில் செல்ல நாய்க்குட்டி, அவர் வருகைக்கு காத்திருந்தது போல அவரைத் தேடி ஓடிவருகிறது.

அதைக் கொஞ்சுகிறார், தமன்னா. அந்த செல்லக்குட்டி, மல்லாக்கப்படுத்து அவருடன் விளையாடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமான நெட்டிசன்ஸ், உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி, கமென்ட் செய்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on